குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தி  பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்த முடிவு 

மத்திய அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்கக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட் டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.



தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு ரூ.7,700 சம்பளமாகத் தரப்படு கிறது. ஊதிய உயர்வு, பணி நிரந் தரம் உட்பட பல கோரிக்கைகளை, பகுதி நேர ஆசிரியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின் றனர். ஆனால், அரசு இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை. இதனால் பகுதி நேர ஆசிரி யர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பகுதி நேர ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது. ‘‘கடந்த 8 ஆண்டுகளில் வெறும் ரூ.2,500 மட்டுமே ஊதியம் உயர்த்தி தரப்பட்டுள்ளது.



7-வது ஊதியக்குழுவில் பகுதி நேர ஊழி யர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டும் சம்பளம் உயர்த்தப்படவில்லை. ஆசிரியர்கள் போராட்டத்தின் போது எங்களை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டு பள்ளி களை அரசு நடத்துகிறது. எனவே, எங்களை ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அது வரை மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியமான ரூ.18,000 மற்றும் தொழிலாளர் சேம நிதி, போனஸ், விடுமுறை உட்பட அடிப்படை சலுகைகளை வழங்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் போராட் டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படும் ’’என்றனர்.
Share:

Categories