ரயில்வே பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பம் வரவேற்பு

ரயில்வே பணிக்கு முன்னாள் படைவீரர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் வரதராஜன் தெரிவித்தார்.






இதுகுறித்து அவர் கூறியதாவது:இந்திய ரயில்வே துறையில் ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பணியிடங்களுக்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் www.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 31.1.2019க்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணியிடங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு இந்திய ரயில்வே பணி தேர்வுக்குழுவின் மேற்கண்ட இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை காணலாம்.



விண்ணப்பித்த விவரத்தை 5.2.2019க்குள் சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
Share:

Categories