மழலையர் வகுப்புகளுக்கான பணி மாறுதல் பணியை விரைந்து முடிக்க தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வித் துறை இயக் குநர் கருப்பசாமி அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: அரசு நடுநிலைப் பள்ளி வளாகத் தில் இயங்கும் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பு கள் தொடங்கப்பட உள்ளன. இதற் கான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டன. அதன்படி, மழலையர் வகுப்புகளுக்கு பணி மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள், பணி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டால் திட்ட மிட்டபடி மாணவர் சேர்க்கையை முடிக்க முடியாது.
உடனடியாக சேர வேண்டும் எனவே, இதில் மெத்தனம் காட்டாமல் ஆசிரியர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியில் உடனடியாக சேர, முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் மாணவர் சேர்க்கையில் அந்த ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
கல்விச்செய்திகள்
» மழலையர் வகுப்புகளுக்கான பணி மாறுதல் நடவடிக்கையை விரைந்து முடிக்க உத்தரவு
மழலையர் வகுப்புகளுக்கான பணி மாறுதல் நடவடிக்கையை விரைந்து முடிக்க உத்தரவு
தமிழ்க்கடல்Saturday, January 19, 2019





