
ஜாக்டோ ஜியோ வின் நெஞ்சுரம் மிக்க போராளிகளுக்கு புரட்சிகர போராட்ட வாழ்த்துக்கள். 22-ம் தேதியில் இருந்து தொடர்ந்து களத்தில் நின்று கொண்டிருக்கக் கூடிய உங்களுடைய உறுதியினால் போராட்டமானது வெற்றிகரமாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்பொழுதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் அவர்கள் தாமாக முன்வந்து தொடுத்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வழக்கு விசாரணை முடிந்த பின்பு அது குறித்த அறிவிப்புகள் வெளியாகும். பல்வேறு கட்ட இழப்புகளைச் சந்தித்து நமது ஜாக்டோ-ஜியோ போராளிகள் தொடர்ந்து களத்தில் உள்ள வேளையில், தவறான பகிர்வுகள் பரவுவதும் பகிர்வதும் களத்திற்கு ஏற்புடையதல்ல. வலைதளங்களிலோ ஊடகங்களிலோ வரும் தேவையற்ற வீண் வதந்திகளை நம்பாது *மாநில நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் வழி தரும் செய்தியை மட்டும் கேட்டு செயல்படுங்கள்.
போராட்டம் வாபஸ் பெறுவதாக வெளியான காட்சிப் பதிவு 2017* போராட்டத்தின் போது மதுரை நீதிமன்றக்கிளையில் புதிய தலைமுறையில் எடுக்கப்பட்டது.
மேலும் *இன்று (29.01.19) இரவு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த முடிவுகள் வெளியாகும். அதுவரையில் *ஜாக்டோ-ஜியோ போராளிகள் யாரும் வேறு எந்த விதமான வதந்திகளையும் நம்பாமல் தொடர்ந்து உறுதியுடன் களத்தில் நிற்கக் கேட்டு கொள்கிறோம்.
_தோழமையுடன்,_
*JACTTO-GEO.*





