Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 26, 2019

வரலாற்றில் இன்று 26.02.2019


பெப்ரவரி 26 கிரிகோரியன் ஆண்டின் 57 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 308 (நெட்டாண்டுகளில் 309) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1606 – டச்சு நாடுகாண்பயணி வில்லெம் ஜான்சூன் ஆஸ்திரேலியாவைக் கண்ட முதலாவது ஐரோப்பியர்.
1658 – வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான்.
1748 – “ஜேக்கப் டி ஜொங்” (Jacob de Jong, Jnr) யாழ்ப்பாணத்தின் டச்சுக் கமாண்டராக நியமிக்கப்பட்டான்.
1794 – கோப்பன்ஹேகன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.


1815 – நெப்போலியன் பொனபார்ட் எல்பாவில் இருந்து தப்பினான்.
1848 – இரண்டாவது பிரெஞ்சு குடியரசு அறிவிக்கப்பட்டது.
1936 – இராணுவத்தினர் ஜப்பான் அரசைக் கவிழ்க்க இடம்பெற்ற புரட்சி தோல்வியில் முடிந்தது.
1952 – ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.
1972 – மேற்கு வேர்ஜீனியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
1984 – பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.
1991 – உலகம் பரவிய வலையை (WWW) அறிமுகப்படுத்திய டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்ற உலகின் முதலாவது இணைய உலாவியை அறிமுகப்படுத்தினார்.
1991 – வளைகுடாப் போர்: குவெய்த்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் ஹுசேன் அறிவித்தார்.
1993 – நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
2001 – ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.


2004 – மக்கெடோனியாவின் அதிபர் போரிஸ் டிராஜ்கோவ்ஸ்கி பொஸ்னியா, ஹெர்சகோவினாவில் விமான விபத்தில் கொல்லப்பட்டார்.

பிறப்புகள்

1903 – குயிலியோ நாட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியலாளர் (இ. 1979)
1946 – அகமது செவாயில், நோபல் பரிசு பெற்ற எகிப்திய வேதியியலாளர்
1947 – தாராபாரதி தமிழ்க்கவிஞர் (இ.2000)

இறப்புகள்



1931 – ஓட்டோ வல்லாக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர், (பி. 1847)
1998 – தியோடர் ஷூல்ட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளியலாளர், (பி. 1902)
2014 – கே. எஸ். பாலச்சந்திரன், ஈழத்து எழுத்தாளர், நாடகக் கலைஞர் (பி. 1944)

சிறப்பு நாள்

குவெய்த் – விடுதலை நாள் (1991)