Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 24, 2019

குரூப் 2 முதன்மை தேர்வில் புதியவகையான விடைத்தாள்!!





தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு TNPSC தேர்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்கப்படுகின்றது. குரூப் 2 முதன்மை தேர்வில் புதியவகையான விடைத்தாள் வழங்கப்பட்டது. தமிழகத்தின் அரசுத்துறை நிர்வாகத்தில் உலா அரசு பணியிடங்களை TNPSC தேர்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்குகின்றது . இந்நிலையில் குரூப் 2_வை வைத்து சார்பதிவாளர் , நகராட்சி ஆணையர் போன்ற 23 துறைகளில் உள்ள 1297 காலிப்பணியிடங்களுக்கு பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வு மூலம்தேர்வு செய்ய TNPSC சார்பில் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது.


சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்வை 16 ஆயிரத்து 790 பேர் கலந்து கொண்டு எழுதினர்.இதுவரை முதன்மை தேர்வுக்கு கேள்வித்தாள் தனித்தனியே வழங்கப்படும் ஆனால் புதிய தேர்வு முறை அறிமுகப்படுத்தபட்டதை அடுத்து கேள்வியும் அதற்கான பதிலும் இடம்பெறும் வகையில் ஒரே புத்தகமாக இடம்பெற்றிருந்தது.