Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 28, 2019

வனக்காப்பாளர் பணிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியீடு


தமிழகத்தில், வனக்காப்பாளர் பணிக்கான தேர்வு முடிவுகள், வனத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 726 வனக்காப்பாளர், 152 ஓட்டுனர் உரிமத்துடனான வனக்காப்பாளர் பணிக்கான தேர்வுகள், டிச., 10,11ல், நடந்தது.

இவர்களுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு, உடல் தகுதி தேர்வு ஆகியவை, ஜன., 28ல் நடந்தது.இறுதிகட்ட தேர்வுகள், பிப்., 25, 26ல் நடந்தது. இதன் வாயிலாக, வனக்காப்பாளர் பணிக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட, 726 பேரின் பதிவு எண்களை, வனத்துறை வெளியிட்டுள்ளது.இதே போல, ஓட்டுனர் உரிமத்துடனான வனக்காப்பாளர் பணிக்கு தேர்வான, 59 பேரின் பதிவு எண்களையும் வனத்துறை வெளியிட்டுள்ளது. இந்த விபரங்களை www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.