Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 26, 2019

மது வாங்க ஆதார் கார்டு?


டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.



டாஸ்மாக் கடைகளுக்கு பார் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்று உள்ளது. இதனால் இந்த டெண்டரை ரத்து செய்து, மீண்டும் புதிய டெண்டர் விட ஆணையிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று (பிப்ரவரி 26) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது. அப்போது, வயது வந்தவர்கள் மட்டும் மது வாங்குவதை உறுதி செய்ய ஆதார் அட்டையைக் கட்டாயம் ஆக்கலாமா என்பது குறித்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மார்ச் 12ஆம் தேதி பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.


“டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை ஏன் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என்று மாற்றக் கூடாது. டாஸ்மாக் கடைகளுடன் இணைந்திருக்கும் பார்களை ஏன் மூடக் கூடாது” என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது