Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 26, 2019

தேர்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கப்பட்ட எம்எல்ஏ, ஊதியத்தை திருப்பித்தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!





*வேல்துரை எம்எல்ஏவாக இருந்தபோது பெற்ற ரூ.21.58 லட்சத்தை திருப்பி தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!*


காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் வேல்துரை. கடந்த 2006ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரை சேரன்மகாதேவி தொகுதியில் எம்.எல்.ஏ. பதவி வகித்த இவரது தேர்தல் வெற்றி செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவால் 5 ஆண்டுகள் அவர் பெற்ற சம்பளத்தினை திருப்பி செலுத்தும்படி வேல்துரைக்கு சட்டமன்ற செயலாளர் உத்தரவிட்டு இருந்தார். அவரது உத்தரவினை எதிர்த்து வேல்துரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கப்பட்ட எம்.எல்.ஏ., ஊதியத்தினை திருப்பி தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டால் எம்.எல்.ஏ. பெற்ற சம்பளத்தினை திருப்பி செலுத்த வேண்டும். இதன்படி அவர், ரூ.21 லட்சத்து 58 ஆயிரம் பணத்தினை 4 வாரங்களில் திருப்பி செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது