Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 28, 2019

கல்விதொலைக்காட்சிக்கான செயற்கோள் விரைவில் பயனுக்கு வரும் - அமைச்சர் செங்கோட்டையன்


கல்வி தொலைக்காட்சிக்கான செயற்கோள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் துவங்கபட உள்ள கல்வி தொலைக்காட்சியின் ஒளிப்பதிவு அரங்கு அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அமைய உள்ளது. இதனை பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பள்ளி மாணவர்களுக்கு 15 லட்சத்து 20ஆயிரம் லேப்டாப்கள் வழங்கப்படும் என்று கூறினார். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித்தேர்வு வைத்து தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.



முன்னதாக மறைந்த IAS அதிகாரி சங்கரன் எழுதிய என் வாழ்வில் சந்தித்ததும் சாதித்ததும் என்ற புத்தகத்தை அவர் வெளியிட்டார். இதே போன்று கோவையில் பேட்டியளித்த அமைச்சர், வெள்ளியன்று நடைபெறவிருக்கும் பிளஸ்டூ பொது தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், அச்சமின்றி தேர்வு எழுத, வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தொடர்ந்து, இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு போதிய கட்டமைப்பு உள்ளது என்ற கடிதம் மத்திய நீட் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.