Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 28, 2019

தமிழகத்தில் இன்று முதல் 'ஸ்மார்ட்' லைசென்ஸ்


தமிழகம் முழுவதும் இன்று முதல் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமான லைசென்ஸ்கள் வழங்கப்படுவதாலும் அவற்றின் விபரங்களை முறையாக இணைய தளத்தில் பதியாததாலும் பல்வேறு குற்றங்கள் நிகழ்கின்றன. அத்துடன் போலி லைசென்ஸ்களும் புழக்கத்தில் உள்ளன. இதை தடுக்க கியூ.ஆர். கோடு வசதியுடன் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளை வழங்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த ஆண்டுக்குள் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்குவதை நாடு முழு வதும் நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இந்த திட்டத்தை ஜன. 22ல் போக்கு வரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் ஸ்மார்ட் கார்டு வடிவில் லைசென்ஸ் வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. விடுபட்டிருந்த ஆரணி செய்யூர் ஆர்.டி.ஓ.
அலுவலகங்களில் இன்று இந்த வசதி துவக்கப்படுகிறது. இதனால் நாட்டில் முதல் முறையாக மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்கும் மாநிலமாக தமிழகம் மாற உள்ளது.