JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, February 23, 2019

தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்றும், நாளையும், வாக்காளர் சிறப்பு முகாம்

தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்றும், நாளையும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.வாக்காளர் சிறப்பு முகாம், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கும். முகாமில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.

பெயர் சேர்க்க, படிவம், 6; பெயர் நீக்க, படிவம், 7; விபரங்களை திருத்த, படிவம், 8; தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றம் செய்ய, படிவம், 8 - ஏ ஆகியவற்றில், விண்ணப்பிக்க வேண்டும்.''வாக்காளர் சிறப்பு முகாம் வாய்ப்பை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.