
பற்களில் சிறுசிறு புள்ளிகளாகக் காணப்படும் கறைகளைக் கூட மறைத்து இயல்பான பற்களைப்போல் காட்டும் அளவுக்கு தற்போது ஃபில்லிங் வந்துவிட்டது. பற்கள் என்ன நிறத்தில் இருக்கிறதோ, அதில் இருந்து சற்றும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு அதே நிறத்தில் ஃபில்லிங் செய்யும் வசதி வந்துவிட்டது. வெளித்தோற்றத்தில் ஃபில்லிங் செய்ததே தெரியாது.
பல் சொத்தையை ஆரம்பநிலையிலேயே கண்டுபிடிக்க இப்போது மாத்திரையும் வந்து இருக்கிறது. இந்த மாத்திரையை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் சொத்தை உள்ள இடங்களில் மட்டும் கறுப்பு நிறத்தில் புள்ளிகள் தென்படும். இதன்மூலம் சொத்தை உருவாக இருப்பதை ஆரம்பநிலையிலேயே கண்டுபிடித்துவிடலாம்.எல்லாவற்றையும்விட முக்கியமாக, 6 மாதங்களுக்கு ஒரு முறை பற்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது.


