Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 28, 2019

அரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை


அரசு வேலைக்குப் பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி அலுவலகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் வியாழனன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இனி அரசு வேலைக்கு யாராவது பணம் தர முயன்றால் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.



அதேபோல் மருத்துக் கல்வி மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு யாரும் பணம் அளிக்கக் கூடாது.

அவ்வாறு யாராவது முயன்றால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கபப்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.