Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 28, 2019

மைதானத்தில் அறிவியல் மேதை சர்.சி.வி ராமன் - தேசிய அறிவியல் தினத்தில் அசத்திய அரசு பள்ளி!





இந்தியாவின் அறிவியல் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 -ம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், அறிவியல் துறையில் இந்தியாவுக்குப் பெருமை ஈட்டித்தந்தவர்களுக்கு மரியாதை செலுத்துதல், அறிவியலில் புதிய சாதனைகள் படைத்திடும் ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அறிவியல் தினத்தை ஆம்பூர் அரசுப் பள்ளி அறிவியல் மேதை சர்.சி.வி.ராமனுக்கு புதிய விதத்தில் மரியாதை செலுத்தியுள்ளது.



ஆம்பூர், பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜோ.சத்தியகுமார் தலைமையில் கொண்டாடப்பட்ட அறிவியல் தின விழாவில், பள்ளி மாணவர்களில் ஒரு பகுதியினர், இந்தியாவுக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்த சர்.சி.வி.ராமனின் முகமூடி அணிந்து, அவரைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அறிவியல் சோதனை, பேச்சுப் போட்டிகள் உள்ளிட்டவையும் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வாக, பள்ளி மைதானத்தில், மாணவர்கள் `ராமன்' எனும் பெயர் வரும் விதமாக நின்றனர். அவர்களின் பின், சர்.சி.வி.ராமன் முகமூடியை அணிந்திருந்த மாணவர்கள் நின்றுகொண்டனர்.

எல்லோரும் ஒரே நேரத்தில், இந்தியாவுக்குப் புகழைத் தந்து மட்டுமல்லாமல், அறிவியல் துறையில் அசாத்தியத்தை நிகழ்த்தியமைக்காக, `தேங்க் யூ ராமன்' என்று எல்லோரும் ஒரே நேரத்தில் கூற, அந்தப் பெயர் பள்ளியைத் தாண்டி வெகுதூரம் கேட்டது. பள்ளியின் ஆசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்திருந்தனர்.