Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 28, 2019

‘குரூப் மெசேஜை ஈஸியாக தேடலாம்’ - வாட்ஸ்அப் புதிய அப்டேட்



வாட்ஸ்அப் குரூப்களில் அனுப்படும் மெசெஜ்களில் குறிப்பட்ட நபரின் மெசேஜை ஈஸியாக தேடும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.



வாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக அது உள்ளது. இந்தச் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. அதன்பின்னர் வாட்ஸ் அப்பில் பல புதிய அப்டேட்கள் கொண்டு வரப்பட்டன. வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பது, பணம் அனுப்புவது, குரூப் ஃபார்வேட் மெசஜ்களை நிபந்தனைக்குள் கொண்டு வந்தது உள்ளிட்ட அப்டேட்கள் வரவேற்பை பெற்றன.


ஆனால், வாட்ஸ்-அப் உள்ள குரூப்களில் அதன் பயன்பாட்டாளர்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன. அதனை பயன்பாட்டாளர்கள் பார்க்கும்போது, அவர்களை குறிப்பிட்டோ அல்லது குறிப்பிட்ட நபரின் கருத்தையோ தேடுவது என்பது சிரமமான ஒன்றாகும். இந்த குறையை தீர்க்கும் வகையில்தான், தற்போது ‘அட்வான்ஸ் சர்ஜ்’ என்ற தேடல் அப்டேட் ஒன்றை வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வசதி தற்போது பீட்டா பயன்பாட்டளர்களின் சோதனையில் உள்ளது. இன்னும் சில வாரங்களில் இது அனைவரது பயன்பாட்டிற்கு வரலாம்.