JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, February 23, 2019

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு: தனித் தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் 26 முதல் 28-ஆம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன. தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கெனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத தனித் தேர்வர்கள் தற்போது நடைபெறவுள்ள அறிவியல் செய்முறைத் தேர்வுகளில் தவறாமல் கலந்து கொண்டு தேர்வெழுத அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ள தேதி குறித்து அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் தங்கள் முகவரிக்கு கிடைக்கப் பெறாதவர்கள், இந்த அறிவிக்கையைத் தெரிந்து கொண்டு செய்முறைத் தேர்வு நடைபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரை அணுகலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.