Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 27, 2019

வினாத்தாள் மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவு




பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினாத்தாள் அனுப்பும் பணி, நேற்று துவங்கியது.



வினாத்தாள், 'லீக்' ஆகாமல் இருக்க, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது

பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு, மார்ச், 6 மற்றும் 10ம் வகுப்புக்கு, மார்ச், 14ல் பொது தேர்வு துவங்க உள்ளது.

தேர்வில், மாணவர்கள் விடை எழுத வேண்டிய முதன்மை விடை தாள்கள், மாணவர் விபரம் அடங்கிய முகப்பு தாள்கள், தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினாத்தாள்கள், தேர்வு மையங்களுக்கு அனுப்பும் பணி, நேற்று துவங்கியது.



அரசு தேர்வு துறையில் இருந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் வினாத்தாள்கள், அங்கிருந்து, தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன

வினாத்தாள்கள் எந்த வகையிலும், லீக் ஆகாமல் இருக்கும் வகையில், கல்வி அதிகாரிகளும், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, வினாத்தாள் மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.