Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 23, 2019

நாட்டார்மங்களம் – களையூர் இராஜாதேசிங்கு பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி (23.02.2019)


 VIDEO LINK
இராஜாதேசிங்கு பப்ளிக் பள்ளி விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், நாட்டார்மங்களம் – களையூர் இடையில் இயங்கி வருகிறது.

எல்கேஜி முதல் பத்தாம் வகுப்புவரை உள்ள இப்பள்ளியில் 753 மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
 VEDIO LINK
இப்பள்ளியில் இன்று காலை(23.02.2019) சுமார் 9.30 மணியளவில் கண்காட்சித் தொடங்கப்பட்டது.
இக்கண்காட்சியில் மாணவ, மாணவியர் தங்கள் கைவண்ணத்தைக் காட்டு வகையில் பல்வேறுபட்ட தலைப்புகளின் கீழ் பழைய மற்றும் தேவையற்றப் பொருட்களைக் கொண்டு தங்களின் படைப்புகளை அமைத்துள்ளனர்.
கற்காலம் முதல் இக்காலம் வரை மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான, அவர்கள் பயன்படுத்திய பொருட்களோடு,

அவர்களின் செய்தொழில்கள் அத்தொழில்களுக்குத் தேவையான பழைய மற்றும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய உபகரணங்கள், இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மக்கள் பயன்படுத்துகின்ற அறிவியல் சாதனங்கள், எதிர்காலத்தின் தேவைகள் எனப் பன்முக நோக்கில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.