Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 3, 2019

பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத போதும் பிளஸ் 1-ல் தேர்ச்சி பெறாதவர்கள் நேரடியாக பிளஸ் 2 எழுத சலுகை: தேர்வுத்துறை அறிவிப்பு



பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்கள், பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காத நிலையிலும் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.



தமிழக பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தேசிய நுழைவுத்தேர்வை கருத்தில் கொண்டு பிளஸ் 1 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டதுடன், பொதுத்தேர்வும் கடந்த ஆண்டு முதல் அமல் செய்யப்பட்டது. அதன்படி கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட பிளஸ் 1 பொத்தேர்வை பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவர்கள் எழுதினர். இதில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதேநேரம் 75 ஆயிரம் பேர் தோல்வியுற்றனர். 11-ம் வகுப்பு தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் தொடர்ந்து 12-ம்வகுப்புக்குச் செல்லலாம்.


தோல்வியுற்ற பாடங்களை 12-ம் வகுப்பு இறுதித்தேர்வின்போது சேர்த்து எழுதிக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.அதேநேரம் தனியார் பள்ளிகளில் படிக்கும் 26ஆயிரம் மாணவர்கள் நூறு சதவீத தேர்ச்சிக்காககட்டாய மாற்றுச் சான்றிதழ் வழங்கி வெளியேற்றப்பட்டனர். இதை கண்டறிந்த அரசு தேர்வுத்துறை, தோல்வியுற்ற மாண வர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமே மீண்டும் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளித்தது. இருப்பினும் 40 சதவீத மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்தனர். இந்நிலையில் அவ்வாறு விண்ணப்பிக்காத மாணவர்களும் தேர்வு எழுத தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.


அதன்படிமாணவர்களுக்கு, ஏற்கெனவே தாங்கள் எழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஹால்டிக்கெட்கள் தரப்பட்டுள்ளன.இதன்படி, மாணவர்கள் யாரிட மும் அனுமதி பெறாமல் நேரடியாக தேர்வு மையத்துக்குச் சென்று தேர்வு எழுதலாம். மேலும், தேர்வுமைய விவரங்களை தலைமை யாசிரியர் மூலம் கேட்டறிய வேண்டும் என தெரிவித்துள்ளது.