Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 7, 2019

மார்ச் 11 - இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.


புதுக்கோட்டை :

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

விழுப்புரம் :

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி மார்ச் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா வருகிற 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்திருத்தேர் உற்சவத்தையொட்டி, மார்ச் 11-ஆம் தேதி ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இருப்பினும், அந்த தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.


மேலும், மாணவ, மாணவிகளுக்கு அந்த தேதியில் பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெறுவதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அந்தத் தேர்வு அன்றைய தேதியிலேயே வழக்கம்போல நடைபெறும். உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மார்ச் 11-ஆம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 27-ஆம் தேதி(சனிக்கிழமை) பணி நாளாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.