Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 11, 2019

வரலாற்றில் இன்று 11.03.2019


மார்ச் 11 கிரிகோரியன் ஆண்டின் 70 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 71 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 295 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1702 – முதல் ஆங்கில நாளிதழான தெ டெய்லி குராண்ட் (The Daily Courant) லண்டனில் வெளியிடப்பட்டது.
1801 – ரஷ்யாவின் முதலாம் பவுல் கொல்லப்பட்டான். அவனது மகன் முதலாம் அலெக்சாண்டர் மன்னனானான்.


1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
1864 – இங்கிலாந்து ஷெஃபீல்ட் நகரில் இடம்பெற்ற செயற்கை வெள்ளப் பெருக்கினால் 250 பேர் கொல்லப்பட்டனர்.
1897 – மேற்கு வேர்ஜீனியாவுக்கு மேலாகப் பறந்த எரிவெள்ளி ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.
1902 – காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையான 21 மைல் நீள புகையிரதப் பாதை அமைக்கப்பட்டது.
1905 – காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை புகையிரதப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.
1917 – முதலாம் உலகப் போர்: பக்தாத் ஜெனரல் ஸ்டான்லி மோட் தலைமையிலான ஆங்கிலோ-இந்தியப் படைகளிடம் வீழ்ந்தது.
1918 – ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது.
1931 – சோவியத் ஒன்றியத்தில் “வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு” என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.


1958 – ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் அணுகுண்டு ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்குக் கரோலினாவில் பலர் காயமடைந்தனர்.
1978 – ஒன்பது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் இஸ்ரேலில் பேருந்து ஒன்றைக் கடத்தி 34 பொதுமக்களைக் கொன்றனர்.
1985 – மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் தலைவரானார்.
1990 – லித்துவேனியா சோவியத்திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது.
1998 – திருகோணமலைத் துறைமுகத்தில் கரும்புலிகள் இலங்கையின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.
2004 – ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இடம்பெற்ற தொடர் தொடருந்துக் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
2007 – தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கயானா விண்வெளி ஏவுதளத்தில் ஏரியன்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4B என்ற இந்திய செய்மதியையும் ஸ்கைநெட்-5A என்ற பிரித்தானியாவின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.
2011 – 2011 செண்டை நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்: சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தனர்.



பிறப்புகள்

1863 – ஆன்ட்ரூ ஸ்டோடார்ட், ஆங்கிலேய்த் துடுப்பாட்ட வீரர் (இ. 1915)
1915 – விஜய் அசாரே, இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2004)
1922 – அப்துல் ரசாக் உசேன், மலேசியாவின் 2வது பிரதமர் (இ. 1976)
1931 – ரூப்பர்ட் மர்டாக், ஆத்திரேலிய-அமெரிக்கத் தொழிலதிபர்.
1952 – டக்ளஸ் ஆடம்ஸ், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2001)
1985 – அஜந்த மென்டிஸ், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்



இறப்புகள்

1863 – ஜேம்சு ஓற்றம், ஆங்கிலேய இராணுவ அதிகாரி (பி. 1803)
1955 – அலெக்சாண்டர் பிளெமிங், மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டியர் (பி. 1881)
1965 – ஹேரி அல்தாம், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (பி. 1888)
1971 – பைலோ பார்ன்சுவர்த், அமெரிகக் கண்டுபிடிப்பாளர் (பி. 1906)
2009 – ஓமக்குச்சி நரசிம்மன், தமிழ்த் திரைப்பட நடிகர்
2013 – ஸ்ரீபாத பினாகபாணி, இந்தியப் பாடகர், மருத்துவர் (பி. 1913)
2013 – வே. தில்லைநாயகம், நூலகவியலாளர், தமிழறிஞர். (பி. 1925)



சிறப்பு நாள்

சாம்பியா – இளைஞர் நாள்