JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, March 31, 2019

விஜயா வங்கி, தேனா வங்கிகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் பேங்க் ஆப் பரோடாவுடன் இணைப்பு.!


விஜயா வங்கி, தேனா வங்கி பேங்க் ஆப் பரோவுடன் இணைக்கும் நடவடிக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. கூடுதல் செலவினத்தை எதிர்கொள்வதற்காக பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு 5042 கோடி ரூபாயை மூலதனமாக வழங்க கடந்த வாரம் மத்திய அரசு முடிவு செய்தது.

இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதியான நாளை முதல் விஜயா வங்கி, தேனா வங்கிகள், பேங்க் ஆப் பரோடாவின் கிளைகளாக செயல்படும் என்றும், அந்த இரு வங்கிகளின் வாடிக்கையாளர்களும் இனி, பேப் ஆப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களாக கருதப்படுவார்கள் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கை மூலம் எஸ்பிஐ வங்கிக்கு அடுத்து நாட்டிலேயே 2வது பெரிய பொதுத்துறை வங்கியாக பேங்க் ஆப் பரோடா உருவெடுத்து உள்ளது.