Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 14, 2019

நேற்று நடைபெற்ற பிளஸ்2 வேதியியல் தேர்வில் 3 மதிப்பெண் பகுதியில் தவறான கேள்வி : மாணவர்கள் குழப்பம்





பிளஸ்2 வேதியியல் தேர்வில், 3 மதிப்பெண் பகுதியில் தவறான கேள்வியால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று வேதியியல் தேர்வு நடந்தது. தற்போது உள்ள வேதியியல் பாடபுத்தகம் கடந்த 14 ஆண்டாக நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த கல்வியாண்டு வரை இந்த பாடபுத்தகத்தில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு வந்தது. நடப்பாண்டு முதல் பிளஸ்2 மொத்த மதிப்பெண் 600ஆக மாற்றப்பட்டுள்ளது. இதனால் நேற்று நடந்த வேதியியல் தேர்வு 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. தேர்வில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் எளிமையான கேள்வியாக இருந்தது.



இதற்கு முன் பல பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இதனால், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வேதியியல் தேர்வை எழுதினார்கள். இருப்பினும் தேர்வில் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாக குறையும். அதற்கேற்ப ஒரு மதிப்பெண் கேள்விகள் சில கடினமாக கேட்கப்பட்டிருந்தது. மேலும் 3 மதிப்பெண் பிரிவில், கட்டாயம் விடையளிக்க வேண்டும் என்ற 33வது கேள்வி தவறாக கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வியை பார்த்து மாணவ, மாணவியர் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து சக்கராம்பாளையம் ஸ்ரீ வித்ய பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை வேதியியல் ஆசிரியை சவிதா கூறியது, ஒரு மதிப்பெண் பகுதியில் 9 கேள்விகள் புத்தகத்தின் பின் பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.



6 கேள்விகள் மட்டும் மாணவர்கள் யோசித்து விடை எழுதும் வகையில் கேட்கப்பட்டுள்ளது. 2 மதிப்பெண், 5 மதிப்பெண் பகுதியில் மாணவர்கள் அதிகம் எதிர்பார்த்த கேள்விகள் தான் வந்துள்ளது. இதனால், தேர்ச்சி மதிப்பெண்ணை எளிதாக அனைத்து மாணவ மாணவர்களும் பெற்றுவிடுவார்கள். அதே நேரம் சென்டம் எடுக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறையும். குறிப்பாக 3 மதிப்பெண் பகுதியில் தமிழ் வழியில் கேட்கப்பட்டுள்ள 33வது கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளது. ஆற்றல் என அந்த கேள்வி துவங்குகிறது.

அதில் கிளர்ஊறு ஆற்றல் என இடம் பெற்றிருக்க வேண்டும். இதனால், அந்த கேள்விக்கு எந்த பார்முலாவை பயன்படுத்தி பதில் எழுத வேண்டுமென மாணவர்கள் சற்று குழப்பம் அடைவார்கள். மற்ற கேள்விகள் அனைத்தும் எளிமையாகதான் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆசிரியை சவிதா தெரிவித்தார்