Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 15, 2019

நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு: மார்ச் 21 முதல் தொடக்கம்


புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நீட் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகள் மார்ச் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அரசின் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் குப்புசாமி தெரிவித்தார்.


இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் நீட் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளி (பெண்கள் மட்டும்), ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி (ஆண்கள் மட்டும்), வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (இருபாலருக்கும்) மற்றும் காரைக்கால் பகுதியில் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி (இருபாலருக்கும்) ஆகியவற்றில் வரும் மார்ச் 19-ஆம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இதன் தொடர்ச்சியாக மார்ச் 21 முதல் நீட் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகள் மேற்கண்ட பயிற்சி மையங்களில் தொடங்கவுள்ளது எனத் தெரிவித்துள்ளார் குப்புசாமி.