வரலாற்றில் இன்று 22.03.2019

மார்ச் 22 கிரிகோரியன் ஆண்டின் 81 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 82 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 284 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1622 – வேர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.

1829 – கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியன வரையறுத்தன.

1873 – புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை அழிக்க சட்டமியற்றப்பட்டது.



1895 – முதன் முதலாக லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை பிரத்தியேகமாகக் காண்பித்தார்கள்.

1939 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.

1943 – இரண்டாம் உலகப் போர்: பெலாரசின் காட்டின் நகர மக்கள் அனைவரும் நாசி ஆதிக்கவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

1945 – அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது.

1960 – ஆர்தர் ஷாவ்லொவ், மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.

1965 – இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.

1993 – இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் chip (80586) இனை அறிமுகம் செய்தது.



1995 – சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.

1997 – ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.

2004 – ஹமாஸ் இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அஹமது யாசின் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2006 – பாஸ்க் ஆயுதக்குழு ஈடிஏ காலவரையறையற்ற போர் நிறுத்தத்தை அறிவித்தது.




பிறப்புக்கள்



1868 – ரொபேர்ட் மில்லிக்கன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1953)

1931 – பேர்ட்டன் ரிக்டர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

1938 – கோவை மகேசன், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், இலங்கை (இ. ஜூலை 4 1992

இறப்புக்கள்


1627 – பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்.

1952 – டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் முதலாவது பிரதமர் (பி. 1884)

2005 – ஜெமினி கணேசன், தமிழ்த் திரையுலக நடிகர் (பி. 1920)



சிறப்பு நாள்




உலக நீர் நாள்
Share:

Total Pageviews

Categories