Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 12, 2019

தேர்தலுக்கு மறுநாள் பிளஸ் 2, 'ரிசல்ட்'


லோக்சபா தேர்தல் முடிந்த மறுநாள், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.



இதற்கான ஆயத்த பணிகள், விரைவில் துவங்க உள்ளன.நாடு முழுவதும், லோக்சபா தேர்தல், ஏப்ரல், 11ல் துவங்கி, மே, 19 வரை நடக்க உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்., 18ல், ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தலில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, ஓட்டு சாவடி பணிகள் வழங்கப்பட உள்ளன.

தேர்தல் முடிந்த அடுத்த நாளான, ஏப்., 19ல், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.



இதையொட்டி, விடைத்தாள் திருத்தும் பணிகள், விரைவில் துவங்க உள்ளன. வரும், 19ம் தேதி, பிளஸ் 2 தேர்வுகள் முடிய உள்ளன. தொடர்ந்து, முழு வீச்சில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

இதற்கான பட்டியலை, தேர்வுத்துறை தயாரித்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, விரைவில், தேர்வுத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது