JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, March 26, 2019

போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி: மார்ச் 31-இல் தொடக்கம்


டிஎன்பிஎஸ்சி, இந்திய குடிமைப் பணி ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம், வருகிற 31-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது என பெரியார் ஐ.ஏ.எஸ் அகாதமி அறிவித்துள்ளது .

இது குறித்து அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி, இந்திய குடிமைப் பணி ஆகியவை நடத்தும் அரசுப் பணித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் மார்ச் 31-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கத்தில், போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்கள்,

துறை சார்ந்த அதிகாரிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளனர். இதில் பங்கேற்க விரும்புவோர் 044-2661 8056, 99406 38537 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.