Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 5, 2019

அரசு மருத்துவமனைகளில் 353 மருந்தாளுனருக்கான காலிப்பணியிடங்கள்!






தமிழக மருத்துவத்துறை ஃபார்மாசிஸ்ட் என்ற பணிக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 353 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:
மருந்தாளுனர் (ஃபார்மாசிஸ்ட்)



காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 353 காலிப்பணியிடங்கள்



சம்பளம்:
மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 01.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.03.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 21.03.2019
ஆஃப்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 25.03.2019







தேர்வுக்கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ.600
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PwBD - ரூ.300

வயது வரம்பு:
ஓசி பிரிவினர் - 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். எஸ்.சி / எஸ்.டி / பிசி / எம்பிசி பிரிவினர் / PwBD - 18 முதல் 57 வயது வரை இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
தேர்வர்கள் டிப்ளமோ இன் ஃபார்மாசி என்ற பட்டயப் படிப்பை 01.03.2019 க்குள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு ஃபார்மாசி கவுன்சிலில் பதிவு செய்ததுடன் அதனை ஒவ்வொரு வருடமும் புதுப்பித்திருக்க வேண்டும்.







ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

முதலில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின், http://www.mrb.tn.gov.in/ - என்ற இணையதளத்திற்கு சென்று 'ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேசனை' கிளிக் செய்து, பின் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.



மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற,
http://www.mrb.tn.gov.in/pdf/2019/Pharmacist_Notification_01032019.pdf - என்ற இணையதளத்தை பார்க்கவும்.