Thamizhkadal WhatsApp Channel

குரூப்-4 பணிக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு 26, 27-ம் தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 பணிகளுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு வருகிற 26 மற் றும் 27-ம் தேதிகளில் நடை பெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன் பிஎஸ்சி செயலாளர் கே.நந்த குமார் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: குரூப்-4 தேர்வில் அடங்கிய காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 11.2.2018 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப் பட்டு 30.7.2018 அன்று தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

இத்தேர்வு தொடர்பான 2-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இளநிலை உதவியாளர், வரைவாளர், நிலஅளவர், கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு 26-ம் தேதி அன்றும் தட்டச்சர் பத விக்கு 27-ம் தேதி அன்றும் சென்னையில் உள்ள டிஎன் பிஎஸ்சி அலுவலகத்தில் நடை பெறும். இதற்கு அனுமதிக்கப்பட்ட வர்களின் பதிவெண்கள் அடங் கிய தற்காலிக பட்டியல் தேர் வாணையத்தின் இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்யலாம் விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதம் எதுவும் அனுப்பப்படாது.

அவர்கள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக் கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண், ஒட்டு மொத்த தரவரிசை, இடஒதுக் கீட்டு விதிகள், விண்ணப்பத் தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணி யிடங்களுக்கு ஏற்ப கலந்தாய் வுக்கு அனுமதிக் கப்படுவர்.

எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் வழங்க இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படாது. இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
Share:

Total Pageviews

Categories