Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 1, 2019

48 MP கேமராவுடன் Redmi Note 7 Pro! வியப்பில் ஆழ்த்தும் சிறப்பு வசதிகள்



ரெட்மி நோட் 7 புரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள வசதிகள் குறித்து இப்போது பார்ப்போம். இதுவரை இல்லாத அளவாக 48 மெகா பிக்சல் மற்றும் ஏஐ வசதியுடன் டூயல் பின்பக்க கேமரா உள்ளது. இந்த கேமராவில் இரவிலும் குறைந்த வெளிச்சத்திலும் துல்லியமாக போட்டோ மற்றும் வீடியோ எடுக்க இயலும். சாதாரண 12 மெகா பிக்சல் கேமரா மொபைலை விட 3 மடங்கு அதிகமாக பிக்சல் இருப்பதால் தூரத்தில் இருந்து புகைப்படத்தை எடுத்தால் ஜூம் செய்யும் போது துள்ளியமாக இருக்கும். சக்தி வாய்ந்த செயல்பாட்டுக்கு குவால்கோம் ஸ்னாப் டிராகன்675 பிராசசர் உள்ளது. இந்த போன் ரெட்மி நோட் 6 ஐவிட 150 மடங்கு அதி வேகத்தில் செயல்படும்.



ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாள் முழுவதும் நிற்கும் அளவுக்கு 4000mah பேட்டரி வசதி. வீடியோவை ஹெச் டி தரத்தில் ரெக்கார்டிங் செய்தால் 5 மணி நேரம் சாரஜ் இருக்கும். சும்மா வைத்திருந்தால் 251 மணி நேரம் சார்ஜ் இருக்கும். கேம் தொடர்ந்து விளையாடினாலும் 8 மணி நேரம் 25 நிமிடம் சார்ஜ் நிற்கும். பாடல்கள் கேட்டால் 38 மணி நேரமும், வீடியோ பார்த்தால் 10 மணி 50 நிமிடமும், கால் மட்டும் செய்தால் 45 மணி நேரமும் சார்ஜ் நிற்கும்.


6.3 புல் திரையுடன் புல்ஹெச்டி டிஸ்பிளே உள்ளது. போனின் பாதுகாப்புக்கு கொரில்லா கிளாஸ், உடனடியாக சார்ஜ் ஏறுதல், 3.5mm ஹெட்போன் ஜாக், ஐஆர் ரிமோட் கண்ட்ரோல், உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. 4GB + 64GB வசதிகள் உள்ள ரெட்மி நோட் 7 புரோ ரூ.13,999, 6GB + 128GB வசதிகள் உள்ள ரெட்மி நோட் 7 புரோ ரூ.16,999 ஆகும். மார்ச் 13ம் தேதி 12 மணிக்கு விற்பனை ஆரம்பம் ஆகிறது