Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 13, 2019

மின்வாரியத்தில் 5,000 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு


தமிழ்நாடு மின்வாரியத்தில் 5,000 கேங்மேன் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உடல்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு வருடத்துக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும்.


அதன் பிறகு, ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை 1-ல் (அதாவது, ரூ.16,200-51,500) நிர்ணயம் செய்யப்படும். இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை வரும் 22-ம் தேதி முதல் ஏப்.22-ம் தேதி வரை மட்டுமே இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வுக் கட்டணங்களை கனரா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செலான் மூலம் ஏப். 24-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

உடல்தகுதி, எழுத்துத் தேர்வுமற்றும் நேரம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.