Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 14, 2019

பள்ளி தேர்வு தேதிகள் அதிரடி மாற்றம்.! கோடை விடுமுறை 50 நாள்.!! கொண்டாட்டத்தில் மாணவர்கள்.!!



17 வது மக்களைவை தேர்தலுக்கான தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி, வேட்பாளர், தொகுதி பங்கீடு, பிரச்சாரம் என்று தீவிரமாக காலத்தில் இறங்கியுள்ளனர்.



இதேபோல், வாக்குசாவடிகளாக பயன்பட்டு வரும் பள்ளிகளில் தேர்வுகள் நடக்காமல் இருக்க முன்னதாகவே தேர்வுகள் நடத்த அணைத்து மாநிலங்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் சுமார் 10 இலட்சம் வாக்கு சாவடிகள் தயாராகி வருகின்றன.

தமிழகத்தில் 18 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், 1ம் வகுப்பு முதல் 9 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 20ம் தேதி வரை தேர்வும், பள்ளி வேலை நாட்களும் உள்ளது.



இதனையடுத்து பள்ளி பொதுத் தேர்வுகளை ஏப்ரல் 10ம் தேதிக்குள் முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 12ம் தேதிக்குள் அனைத்து வகுப்புகளிலும் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, ஒன்று முதல் 9ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 12 ஆம் தேதியே தேர்வுகள் நிறைவடையும். இதனால் பள்ளி மாணவர்களுக்கு முக்கூட்டிய விடுமுறை அளிக்கப்படுகிறது. அடுத்த 2019 - 2020 கல்வியாண்டின் பள்ளி திறக்கும் நாளான ஜூன் 1 ஆம் தேதி சனிக்கிழமை என்பதால், மாறாக 3 (திங்கள்) அல்லது 5 (புதன்) தேதிகளில் திறக்க வாய்ப்புள்ளது.



இதன் மூலம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 50 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், தேர்தலால், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் மற்றும் முடிவு வெளியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.