Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 8, 2019

தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்


தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என, வனத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில், வனவர், வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள், நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, பணி நியமனம் செய்வதற்கான, நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.இதையடுத்து, 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை, வனத்துறை துவக்கியுள்ளது.
இதில், 99 இடங்கள், குறிப்பிட்ட சில மாவட்டங்களில், பழங்குடியினருக்கானது. இந்த பணிக்கு, மே முதல் வாரத்தில், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

ஜூன் நான்காவது வாரத்தில், இதற்கான ஆன்லைன் முறை தேர்வுகள் நடத்தப்படும் என, வனத்துறை அறிவித்துள்ளது. வனக்காவலர் பணியிடங்களுக்கு, ஆன்லைன் முறையில் தேர்வு நடப்பது, இதுவே முதல்முறை.