Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 11, 2019

ரூ.7000 பட்ஜெட்டில் விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்



விவோ நிறுவனம் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வை சீரிசில் வை91 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த விவோ தற்சமயம் வை91ஐ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது.



புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஹீலியோ P22 ஆக்டா-கோர் 12 என்.எம். பிராசஸர், 2 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8 வழங்கப்பட்டுள்ளது.

விவோ வை91ஐ சிறப்பம்சங்கள்:



- 6.22 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
- IMG பவர் வி.ஆர். GE8320 GPU
- 2 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. /32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்


- ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8
- ஃபேஸ் அன்லாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0
- 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி



விவோ வை91ஐ ஸ்மார்ட்போன் ஃபியூஷன் பிளாக், சன்செட் ரெட் மற்றும் ஓசன் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 16 ஜி.பி. வெர்ஷன் விலை ரூ.7,990 என்றும் 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.8,490 என அந்நிறுவனம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.