Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 6, 2019

ஜூலை 7ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு


மத்திய அரசின் கீழ் இயங்கும் சிபிஎஸ்இ, கேந்திர வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டிற்கான 12வது தேர்வு ஜூலை மாதம் 7ம் தேதி நடக்கிறது. இந்த ஆசிரியர் தேர்வு 20 மொழிகளில் நடத்தப்படும். நாடு முழுவதும் 97 நகரங்களில் இந்த தேர்வு நடக்கும்.


தகுதி உள்ளவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. நேற்று தொடங்கி, 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கட்டணம் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இறுதிகட்ட சரிபார்ப்பு 19ம் தேதி வரை நடைபெறும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்யப்படவேண்டும் என்றால் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை செய்யலாம். இதற்கான போட்டித்தேர்வு ஜூலை 7ம் தேதி நடைபெறுகிறது.