Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 1, 2019

கும்பமேளா குறித்த விநாடி- வினா: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், உத்தரப் பிரதேச அரசுடன் இணைந்து கும்பமேளா குறித்த விநாடி-வினா போட்டியை சென்னையில் உள்ள இரு பள்ளிகளில் மாணவர்களுக்கு வியாழக்கிழமை நடத்தியது.
உலக அளவில் பிரசித்தி பெற்ற கும்பமேளாவின் வரலாறு, நமது நாட்டின் கலாசாரம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில்

சென்னை ராமாபுரத்தில் உள்ள சிவந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஆழ்வார்திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கான விநாடி-வினா போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த தலா 16 மாணவர்கள் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதனை எம்.ஓ.பி.வைஷ்ணவ மகளிர் கல்லூரி மாணவிகள் ஒருங்கிணைத்து நடத்தினர். இதில், சிவந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் கோகுல்நாத் தலைமையிலான குழுவும், வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.தேவ் பிரசாத் தலைமையிலான குழுவும் வெற்றி பெற்றன.


இதுகுறித்து மாணவர் கோகுல்நாத் கூறுகையில், இந்தப் போட்டியின் மூலம் நமது இந்திய கலாசாரம், வரலாறு, கும்ப மேளா குறித்த பல அபூர்வமான தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இவற்றை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வது நமது கடமை என்றார்.