Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 11, 2019

எந்த காலத்திலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்


''அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி:



அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, குறைந்தது, ஒரு வகுப்பறையில், 25 மாணவர்கள் இருக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, 1 லட்சம் மாணவர்கள், கூடுதலாக சேரும் அளவுக்கு, வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.



கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்ததும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, தனியாரை மிஞ்சும் அளவுக்கு, தரமான சீருடைகள் வழங்கப்படும். மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததாக, ஒரு சிறிய பள்ளி கூட மூடப்படவில்லை.



ஒரே ஒரு மாணவர் உள்ள பள்ளிகளாக, 33ம், ஒன்பதுக்கு கீழ் ஒற்றை படையில், மாணவர் எண்ணிக்கை கொண்டதாக, 1,234 பள்ளிகளும் உள்ளன. எந்த காலத்திலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.