Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 1, 2019

யுஜிசி-நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் நடத்தப்படும் யுஜிசி-நெட் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 1) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி - பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கும் தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தகுதி பெற வேண்டும். இந்தத் தேர்வை இப்போது என்.டி.ஏ. நடத்தி வருகிறது. 2019 ஆம் ஆண்டுக்கு ஜூன் மாதத் தேர்வு அறிவிப்பை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.


தேர்வு எப்போது?: இந்தத் தேர்வானது ஜூன் 20 முதல் 28 ஆம் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்பட உள்ளது. இதற்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 30 கடைசி நாளாகும். தேர்வறை நுழைவுச் சீட்டை மே 15 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் விவரங்களுக்கு www.ntanet.nic.in, www.ugcnetonline.in ஆகிய இணையதளங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.