JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, March 26, 2019

புதிய பாடத்திட்ட புத்தகம்

புதிய பாடத்திட்ட புத்தகங்களை ஜூன், 3ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு வழங்க தமிழ்நாடு பாடநுால் கழகம் முடிவு செய்துள்ளது.கடந்த, 2017 - 18ம் கல்வியாண்டு ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும், பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேற்கண்ட வகுப்புகள் தவிர பிற வகுப்புகளுக்கு பத்து ஆண்டாக (2009க்கு) பாடத்திட்டம் மாற்றப்படாமல் இருந்தது. நடப்பு கல்வியாண்டு மீதமுள்ள வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்ற கல்வித்துறை மூலம் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.


வல்லுனர் குழுவினர், புதிய பாடத்திட்டத்தை மாற்றியமைத்துள்ளது. ஓராண்டாக நடந்த பணி நிறைவு கட்டத்தை எட்டி, புத்தகங்களும் தயார் செய்யப்பட்டு விட்டன. லோக்சபா தேர்தலால் நடப்பு கல்வியாண்டை முன்கூட்டியே முடிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


ஏப்., இறுதியில் நடக்கவிருந்த தேர்வுகள் முன்கூட்டியே ஏப்., 1ல் துவங்கி, 12க்குள் முடிக்கும் வகையில் தேர்வு அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 49 நாட்கள் விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளன. அப்போது, புதிய புத்தகம் மாணவருக்கு வழங்கப்படும்.