Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 3, 2019

ஆண் குழந்தைகள் நலனுக்காக 'பொன் மகன்' சேமிப்பு திட்டம்!



ஆண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, 'பொன் மகன்' சேமிப்பு திட்டத்தை, தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.



கோவை தலைமை தபால்நிலைய முதுநிலை அஞ்சல் அதிகாரி லியோ மைக்கேல் கூறியதாவது:

ஆண் குழந்தைகளுக்காக, 'பொன் மகன்' சேமிப்பு திட்டம் அறிமுகமாகி உள்ளது. ஆண்டுக்கு, 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம், ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம்.


ஏப்., - மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.ஆண்டுக்கு, 8 சதவீத வட்டி அளிக்கப்படும். திட்டத்தில், இணைய வயது வரம்பு கிடையாது. இவ்வாறு, அவர் கூறினார்