Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 2, 2019

மேனாள் மாணவர்களால் மிளிரும் அரசுப் பள்ளி


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1999 – 2000 ஆம் கல்வி ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மேனாள் மாணவர்கள் தாம் படித்த பள்ளிக்கு “கணினி வகுப்பறை கட்டடப் புனரமைப்பு, கலையரங்க மேடை அமைப்பு, நவீன தொடுதிரை கணினி, ஒளி, ஒலியமைப்பு, மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றை நன்கொடையாக அளித்து பெருமை சேர்த்துள்ளனர்.






விழாவிற்குப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு மு. இராமமூர்த்தி அவர்கள் தலைமை தாங்க விழா இனிதே துவங்கப்பெற்றது. விழாவில் மேனாள் மாணவர்கள் தங்களின் அன்பளிப்பினை வழங்கியதோடு, தங்களின் அனுபவங்களைப் பள்ளி மாணவர்களுக்குப் பகிர்ந்து கொண்டு, இன்றைய சூழலில் படித்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். ஆசிரியர்கள், பெற்றோர்கள் கூறுவனவற்றைக் கேட்டு, கல்வியில் ஆழ்ந்து படித்து தம் குறிக்கோள்களை அடையவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். மேலும் இவ்விழாவில் இப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். விழாவின் இறுதியில் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் முனைவர் க. அரிகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே முடிவுற்றது.