Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 2, 2019

பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சின்ன வெங்காயச்சாறு..!!



வெங்காயச் சாறு தயாரிக்கும்போது நறுக்கிய சின்ன வெங்காயத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெங்காயம் நன்கு வெந்து அதிலுள்ள சாறு வெளியேறியவுடன் அந்த நீரை வடிகட்டி ஸ்கால்ப்பில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.



பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைமுடியை அலசினால் ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும். கொதிக்கும் தேங்காய் எண்ணெயில் சின்ன வெங்காயச் சாறு கலந்தும் தலையில் தடவலாம். சூடு ஆறியபின்னர் வெங்காய சாறு கலந்த சுத்தமான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி தலை குளித்து வந்தால் தலைமுடி வேரை வலுப்படுத்தி வளர்ச்சியடையச் செய்கிறது. இதே போல தேனுடன் சின்ன வெங்காயச் சாறு கலந்தும் தலைமுடிக்கு தடவலாம்.



வாரங்களில் முடி உதிர்வது குறைந்து 4 வாரத்தில் புதிதாக முடி வளரும். ஆலிவ் எண்ணெயை 15 நிமிடம் தலையில் தேய்த்து பின்னர் வெங்காயச் சாற்றினைக் கொண்டு மசாஜ் செய்து 10 நிமிடத்துக்குப் பின் ஷாம்பு போட்டு மிதமான சுடுநீரில் தலையை அலசினால் தலைமுடி நன்கு வளரும்.