Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 13, 2019

பத்தாம் வகுப்பு மாணவர்கள் கவனத்துக்கு...


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் நான்கு தேர்வுகள் பிற்கலிலும், அடுத்த 3 தேர்வுகள் காலையிலும் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் 4 தேர்வுகள், பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 4.45 மணி வரை நடைபெறும்.

இந்த நான்கு தேர்வுகளுக்கும் மாணவர்கள் பிற்பகல் ஒரு மணிக்கு தேர்வு மையத்துக்கு வரவேண்டும். அதேபோன்று, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 12.45 மணி வரை நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.