Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 8, 2019

கல்லீரலை பாதுகாத்து, ஆரோக்கியமாக இருக்கச் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!!!



சென்னை : நமது உடலின் முக்கிய உள்ளுறுப்புகளில் ஒன்று கல்லீரல், நாம் உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரும்புசத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரலின் பங்கு மிக முக்கியமானது.


கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கும். 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும்போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது. கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் மற்றும் ஆல்கஹால் இவைதான் கல்லீரல் சிதைவு நோய்க்கு மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

நாம் உண்ணும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச் சத்து போன்ற சத்துக்கள், கல்லீரல் மூலமாகச் செரிக்கப்பட்டு, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான சத்துக்களாக அனுப்பிவைக்கப்படுகிறது.
கல்லீரலை எப்படி பாதுகாப்பது அதற்கான ஊட்டம் அளிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளவும்: தொடர்புக்கு: 9043020764, 9043020767


உடலுக்கு அவசியம் தேவையான சில வகைப் புரதச்சத்துக்களும் கல்லீரலில் உற்பத்தி ஆகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மிகப் பெரிய பொறுப்பும் கல்லீரலுக்கு உள்ளது. அதிக அளவு மது அருந்தும்போது, ஆல்கஹாலில் இருக்கும் சில வகை வேதிப்பொருட்கள், கல்லீரலின் பணிகளைப் பாதிக்கின்றன. ஒரு கட்டத்தில், கல்லீரல் சிதைவடைந்து, கல்லீரல் சுருக்க நோய் ஏற்படுகிறது. முற்றிய நிலையில்தான் இதன் அறிகுறிகள் தெரியும்.


கல்லீரலை மிகவும் கவனமாக பாதுகாக்கவும், அதன் செயல்பாடுகள் சிறந்த முறையில் அமையவும் தேவையான ஆலோசனைகள் பெற்று விழிப்புணர்வு அடையுங்கள்.