Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 3, 2019

செவிலியர் பணிக்காக விண்ணப்பிக்க காலக் கெடு நீட்டிப்பு


தமிழ்நாடு மருத்துவச் சேவை வேலைவாய்ப்பு ஆணையம் காலியாக உள்ள 2,345 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்திருந்தது.



இதற்கான கடைசி நாள் பிப்ரவரி 27, 2019 என்றும், விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் மார்ச் 1, 2019 என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும் ஜூன் 23,ம் தேதி நடைபெறும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் நர்சிங்கில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.வயது: 18 முதல் 57 வரை இருக்க வேண்டும் கட்டணம்:


பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.700ம், தாழ்த்தப்பட்ட/பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.350ம் கட்டணம். சம்பள விவரம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.14,000 மற்றும் வருடாந்திர சம்பள உயர்வு ரூ.500.மேலும் விபரங்களுக்கு mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.