Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 3, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி!


செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச சிறப்புப் பயிற்சி சென்னையில் வழங்கப்படுகிறது. இதற்கான அறிமுக வகுப்பு மார்ச் 10-ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள பி.டீ.லீ செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில் நடத்தப்படுகிறது.



இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது.



அதன்படி டெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மார்ச் 15-ல் தொடங்கி, ஏப்ரல் 5-ம் தேதி முடியும். தகுதியானவர்கள் www.trb.tn.nic.in இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் நாள் மற்றும் ஹால்டிக்கெட் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச சிறப்புப் பயிற்சியை செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை வழங்குகிறது.



இது தொடர்பாக செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின்கீழ் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பி.டீ.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சிறப்புப் பள்ளியில் மார்ச் 18-ம் தேதி முதல் தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.



இதற்கான அறிமுக வகுப்பு மார்ச் 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் அமைந்துள்ள பி.டீ.லீ செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில் நடத்தப்படும்.

விருப்பமுள்ளவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் காலை 10.30 மணிக்குள்ளாகப் பதிவு செய்து பங்கேற்று பயன்பெறலாம்.


சிறப்புப் பள்ளியின் தொலைபேசி எண்கள் 044-26430029, 8668038347 மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.