Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 8, 2019

நடவடிக்கைகளைத் திரும்ப பெற வேண்டும்! -தமிழகம் முழுவதும் மீண்டும் ஆசிரியர்கள் போராட்டம்!



தமிழகத்தில் ஆசிரியர்களும், அரசுப் பணியாளர்களும் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவர்களுடைய கோரிக்கைகள் நிரந்தரமான தீர்வுகளை நோக்கி இன்னும் நகர்ந்தபாடில்லை.



தமிழகத்தில் உள்ள அரசுப் பணியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், கடந்த ஜனவரி மாதத்தில் பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 8 நாள்கள் தொடர் வேலை நிறுத்தம், சாலை மறியல் போராட்டங்களை முன்வைத்தனர். பள்ளித் தேர்வுகளைக் காரணம் காட்டி அரசுத் தரப்பில் கேட்டுக்கொண்டதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.


ஆசிரியர் போராட்டம்
தேர்தல் நேரத்தில் அரசியலில் கூட்டணி சதுரங்கங்கள் வேகமாக நகர ஆரம்பித்துள்ள நிலையில், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக மார்ச் மாதத்தில் மீண்டும் போராட்டத்தைக் கையில் எடுக்க உள்ளதாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்ட பல ஆசிரியர்களுக்குப் பணி மாறுதல்களும், அவர்கள் மீது வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை அரசு திரும்பப் பெற வேண்டியும் ஏற்கெனவே வலியுறுத்தி வந்த கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியும் நாளை தமிழகம் முழுவதும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்