Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 1, 2019

கல்வித்துறை அலுவலகத்தில் திடீர் ரெய்டு



மதுரை, தல்லாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலக (சிஇஓ) வளாகத்திற்குள் பள்ளி கல்வித்துறையின் மண்டல கணக்குத்துறை பிரிவு செயல்பட்டு வருகிறது.

இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி, சத்யசீலன் தலைமையில் போலீசார் திடீரென நேற்று பகல் 1.30 மணிக்கு மண்டல கணக்குத்துறை பிரிவிற்குள் நுழைந்தனர். மாலை 5 மணி வரை மூன்றரை மணிநேரம் தொடர் சோதனை நடத்தப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித்துறை மண்டல கணக்கு அலுவலர் பார்த்திபன் அறையிலிருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.2.50 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது