Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 11, 2019

சைனிக் பள்ளி சேர்க்கை பட்டியல் வெளியீடு


உடுமலை சைனிக் பள்ளி, 2019 - 20ம் கல்வி ஆண்டில், சேர்க்கைக்கு தேர்வான மாணவர்களின் தற்காலிக தகுதி பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சைனிக் பள்ளிக்கு, 2019 - 20ம் கல்வியாண்டில், ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சேர்வதற்கான நுழைவுத்தேர்வு, ஜன., 6ல், நாடு முழுவதும் நடந்தது.


தேர்வில் தேர்ச்சி பெற்றும், உடல் நலத் தகுதியோடும், உடுமலை, அமராவதி நகர் சைனிக்பள்ளிக்கு தேர்வு செய்யபட்ட மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தற்காலிக தகுதி பட்டியல்,www.sainikschoolamaravathinagar.edu.in என்ற பள்ளி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை, சைனிக் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது